மலையாள படங்களுக்கு மலையாள சினிமாவை தாண்டி தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு உள்ளது. மலையாள கதைகள் என்றாலே வித்தியாசமான கதைக்களமும் வித்தியாசமான கதாபாத்திரங்களும் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த நிலையில், தற்போது மலையாள நடிகர்கள், இயக்குனர்கள் என பலர் மீது தொடர்ந்து பா*லியல் சுரண்டலுக்கு பெண்கள் உள்ளாக்கப்படுகிறார்கள் என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதுவும் மலையாள சினிமா பா*லியல் தொடர்பான விஷயத்தில் உச்சக்கட்டத்தில் இருப்பதாகவும் அடுத்தடுத்து பெண்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளருமான சித்திக் மீது பா*லியல் தொல்லை கொடுத்ததாக நடிகை ஒருவர் புகார் செய்த நிலையில் அவர் ராஜினாமா செய்தார். அதை தொடர்ந்து, மலையாள நடிகர் சங்கத்தின் தலைவராக இருக்கும் மோகன்லால் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் தற்போது ராஜினாமா செய்துள்ளனர்.
இந்த நிலையில்,கேரள நடிகர் சங்கமான அம்மா கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளது. இது மலையாள துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நடிகைகள் அளிக்கும் இந்த பாலியல் குற்றச்சாட்டில் பல முன்னணி ஹீரோக்கள் தலை உருளுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக ஐந்து பெரிய மலையாள ஸ்டார்களின் பெயர் அடிபடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. யார் என்ற விபரம் கண்டிப்பாக வெளியாக போவதில்லை. ஏனெனில் அவர்கள் உச்ச நட்சத்திரம் என்பதால் அரசே அவர்களை காப்பாற்ற முயற்சி செய்யலாம்.
நைஜீரியாவில் கனமழை வெள்ளப்பெருக்கு | Thedipaar News