பெண்கள் சத்தமாக பேசினால் குற்றமா? தாலிபான்கள் அட்டூழியம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தாலிபனின் ஆட்சி தொடங்கிய முதல் நாளிலிருந்தே படிப்படியாக ஆப்கான் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகிறது. தாலிபனின் சமீபத்திய சட்டங்கள் மனித உரிமைகள் ஆணையத்தை திகிலடையை வைத்துள்ளன. "களங்கமும் நல்லொழுக்கமும்" என்ற சட்டத்தை நடைமுறைப்படுத்த அதன் சுப்ரீம் தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்சாதா அனுமதி வழங்கியுள்ளார். 

இந்தச் சட்டம் பெண்கள் தங்களது முழு உடலையும் முகத்தையும் தடிமனான துணியால் மறைக்கக் கட்டளையிடுகிறது. இப்படி ஆடை அணிவதால் ஆண்கள் சலனமடைவதும் பாவச் செயல்களில் ஈடுபடுவதும் தவிர்க்கப்படும் என்கிறது சட்டம்.

இன்னும் ஒருபடி மேலே சென்று, பெண்களின் குரலும் கூட பாவத்தைத் தூண்டும் என்கிறது இந்தச் சட்டம். பெண்கள் பொதுவெளியில் சத்தமாகப் பேசக் கூடாது என்றும், வீட்டுக்குள் இருந்து பாடினாலே, இசைகளை வாசித்தாலோ வெளியில் சத்தம் கேட்கக் கூடாது என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் பொதுவெளிக்கு வரும்போது தங்களது தலைமுடி, முகம், உடலை மறைக்க வேண்டும். பெண்களின் உடை லேசானதாகவோ, குட்டையாகவோ, இறுக்கமாகவோ இருக்கக் கூடாது. குரல் வெளியில் கேட்கக் கூடாது என அடுக்கடுக்காக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

 ஆண்கள் பொதுவெளிக்கு வரும்போது தொப்புள் முதல் முழங்கால் வரை மறைக்கும்படி ஆடை அணிய வேண்டும் எனவும் கூறுகிறது. மேலும், எந்த ஒரு உயிரையும் புகைப்படம் எடுப்பதும், புகைப்படம் வைத்திருப்பதும், பாடல் கேட்கும் கருவிகள் வைத்திருப்பதும் குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இ போ ச பேருந்து விபத்தில் மகள் மரணம் | தந்தை படுகாயம் | Thedipaar News

Related Posts