“2024 ஜனாதிபதி தேர்தல்: இன்று தபால்மூல வாக்குப் பதிவு தொடங்கியது

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்குகளை பதிவுச் செய்யும் பணி இன்று (04) ஆரம்பமாகவுள்ளது.

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இது குறித்த அறிவித்தலை ஜூலை 26ஆம் திகதி தேர்தல்களை ஆணைக்குழு அறிவித்திருந்தது.

இன்று ஆரம்பமாகவுள்ள தபால்மூல வாக்கு பதிவானது நாளை (05) மற்றும் நாளை மறுதினம் (06) ஆகிய மூன்று தினங்களுக்கு இடம்பெறவுள்ளது.

இதன்படி, நாட்டில் உள்ள அனைத்து தபால் நிலையங்களும் தமது கடமைகளை செய்து வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நேற்றைய நாள் நிலவரப்படி, தபால் வாக்களிப்பு சீட்டு, வாக்களிக்க தகுதிப்பெற்றவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இம்முறை கொழும்பு மாவட்டத்தில் 27195, கம்பஹா மாவட்டத்தில் 52486, களுத்துறை மாவட்டத்தில் 37361, காலி மாவட்டத்தில் 41436, மாத்தறை மாவட்டத்தில் 30882 மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 22167 தபால் மூல வாக்கு விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி, இம்முறை சமர்ப்பிக்கப்பட்ட ஏற்றுக்கொள்ளக்கூடிய தபால் வாக்குகளின் மொத்த எண்ணிக்கை 712319 ஆகும். (P)


Related Posts