ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு ’பெண்’ பிரச்சினை

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


ஜனாதிபதி வேட்பாளர்கள் 39 பேருக்கு பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கையின் போது, அவர்களில் ஒருவர் பெண்கள் பிரச்சினையை அடிப்படையாக கொண்டு கூடுதல் பாதுகாப்பை கோரியுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணையில் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

இந்த ஜனாதிபதி வேட்பாளர் தமக்கு கூடுதலான பாதுகாப்பை கோரிய போது, இவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதா என ஆராயும் போது பெண் பிரச்சினை காரணமாகவே பாதுகாப்பு கோரியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களான ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க, நாமல் ராஜபக்ஷ, திலித் ஜயவீர மற்றும் விஜயதாச ராஜபக்ஷ ஆகியோருக்கு விசேட பாதுகாப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமா என பரிசீலிக்கும் போது, ​​பெண்கள் பிரச்னையை அடிப்படையாகக் கொண்ட வேட்பாளர் மட்டுமே, சிறப்பு பாதுகாப்பு கோரியுள்ளார்.  (P)

தேர்தல் பிரசார செலவுகளைக் கண்காணிக்க புதிய இணையதளம் | Thedipaar News

Related Posts