அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் கண்டு அவர்களை அவர்களது நாடுகளுக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கையை ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது. அந்த வகையில் அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இன்றி வசித்து வந்த இந்தியர்கள் பலர் ராணுவ விமானத்தில் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். கடந்த செவ்வாய்க்கிழமை காலை டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து புறப்பட்ட விமானம் மதியம் பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரை வந்தடைந்தது. மொத்தம் 104 பேர் விமானத்தில் வந்தனர். அவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவர். இதனிடையே இந்தியர்கள் 104 பேரும் கைகளில் விலங்கு பூட்டப்பட்டும், கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டும் விமானத்தில் அழைத்து வரப்பட்டதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. மேலும் 487 இந்தியர்களை வெளியேற்ற அமெரிக்கா திட்டமிட்டு உள்ளது. ஒட்டுமொத்தமாக எத்தனை பேர் என கூற முடியாது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா அரசுடன் தொடர்பில் இருந்து வருகிறோம். அமெரிக்காவில் இருந்து இதற்கு முன்னரும் இந்தியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆனால் இந்த முறை நடவடிக்கைகள் சற்று வேறுவிதமாக உள்ளன. சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவது தேசிய பாதுகாப்பு நடவடிக்கை என அமெரிக்கா விளக்கம் அளித்து உள்ளது.