தர்பூசணி சாப்பிட்ட குடும்பத்தில் 4 பேர் பலி!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

மும்பையில் இடம்பெற்ற மர்மமான உணவு விஷத்தன்மை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையின் பைதோனி பகுதியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள்  40 வயதுடைய அப்துல்லா டோகாடியா,   35   வயதுடைய  அவரது மனைவி நஸ்ரீன் மற்றும் அவர்களது இரு மகள்கள்  16   வயதுடைய   ஆயிஷா ,  13   வயதுடைய  ஜைனப் ஆகியோர் ஆவர்.

தகவல்களின் படி, குடும்பத்தினர்  இரவு உறவினர்களுடன் சேர்ந்து சிக்கன் புலாவ் சாப்பிட்ட பிறகு நள்ளிரவில்  குடும்பத்தினர் மட்டும் தர்பூசணி பழம் சாப்பிட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து அதிகாலை நேரத்தில் வாந்தி மற்றும் மயக்கம் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டதால், அவர்கள் ஜே.ஜே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும், சிகிச்சை பலனின்றி நால்வரும் உயிரிழந்துள்ளனர்.

புலாவ் சாப்பிட்டஉறவினர்கள் நலமாக இருப்பதால், தர்பூசணி பழமே உணவு விஷத்தன்மைக்குக் காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் மும்பை காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

மேலும்,  பழங்களில் நிறத்தை அதிகரிக்க ஊசி மூலம்  பழங்களில் ரசாயனங்கள் செலுத்தப்பட்டுள்ளதா என்பதையும் கண்டறிய, மாதிரிகள் தடயவியல் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவத்தையடுத்து, கோடைக்காலத்தில் வெட்டி வைக்கப்பட்ட பழங்கள் மற்றும் பழைய உணவுகளை உண்ணும் போது பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Posts