ஹமில்டனில் டேட்டிங் ஆப் மூலம் தொடர்பு கொண்டு துப்பாக்கி முனையில் கொள்ளை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஹாமில்டனில் டேட்டிங் செயலி ஒன்றின் மூலம் தொடர்பு ஏற்படுத்திக் கொண்ட சிலர் துப்பாக்கி முனையில் கொள்ளையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சந்திப்பதற்காக சென்றிருந்த நபரை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி தாக்குதல் நடத்தி பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. 

பாதிக்கப்பட்டவர்களின் அலைபேசிகளை பறித்து சந்தேக நபர்கள் பணப் பரிமாற்றம் செய்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதே விதமாக ஏமாற்றி மற்றுமொருவது வீட்டிற்கு சென்று கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களில் இரண்டு பேரின் புகைப்படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் குறித்த தகவல்கள் தெரிந்தால் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

பெருமளவான காணிகளை விடுவிக்க தீர்மானம் - ஜனாதிபதி | Thedipaar News

Related Posts