இறுதி மூச்சு வரை ஈழதமிழர்களுக்காக போராடிய ஈழவேந்தன்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழினத்தின் விடுதலைக்காக அயராமல் போராடிய யாழ்ப்பாணம் நல்லூரை சேர்ந்த ஈழவேந்தன் கனடாவில் காலமானார். 

தமிழீழ கொள்கையில் மிகவும் பிடிப்புள்ளவராக சமரசமில்லாத போராளியாக இறுதி வரை இருந்தவர். ஆயுதப் போராட்டம், தமிழீழ விடுதலை ஆகியவற்றை முழுமையாக ஆதரித்தவர்.

1990-ம் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் எங்கு ஈழ ஆதரவு கூட்டம் நடந்தாலும் கையில் பையுடன் கத்தை கத்தையாக நோட்டீஸ்களை பிடித்தபடி ஈழவேந்தனைப் பார்க்க முடியும். 

தமிழீழ பிரச்சனையில் அவ்வப்போது ஏற்படும் தாக்கங்கள், நிகழ்வுகள், தமிழ்நாட்டு மக்களுக்கு ஈழப் பிரச்சனையை புரிய வைக்கும் நோக்கத்தில் இந்த நோட்டீஸ்களை இடைவிடாமல் கொடுத்துக் கொண்டே இருந்தவர் ஈழ வேந்தன்.

தமிழ்நாட்டின் அனைத்து அரசியல்வாதிகளுடனும் மிக நெருக்கமான நல்லுறவை பேணி வந்தார். 2000-ம் ஆண்டு தமிழ்நாட்டில் தங்கி இருந்த ஈழ வேந்தனை இந்திய அரசு வலுக்கட்டாயமாக நாட்டை விட்டு இலங்கைக்கு நாடு கடத்தி அனுப்பியது.

பின்னர் இலங்கையில் நாடாளுமன்ற எம்பியாக இருந்தார். பிறகு கனடா சென்று ஈழ ஆதரவு செயல்பாடுகளை மேற்கொண்டிருந்தார். வயது முதுமை, உடல்நலக் குறைவால் ரொறன்ரோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஈழவேந்தன் காலமானார்.

Related Posts