நடிகையின் அடிதடிக்கு ஆளான நபர் ஆஸ்பத்திரியில் அட்மிட்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழ் சினிமாவில் முரளி மற்றும் வடிவேலு நடிப்பில் வெளியாகி செம ஹிட்டடித்த திரைப்படம் சுந்தரா டிராவல்ஸ்.இந்த படத்தில் முரளிக்கு ஜோடியாக நடித்தவர் தான் நடிகை ராதா. இவர் தமிழில் சில சீரியல்களிலும் நடித்துள்ளார். மலையாள சினிமாவில் முன்னணி ஹீரோயினாகவும் வலம் வந்தவர். சில காலம் சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருந்தார். பின்னர் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா 2 சீரியலிலும் வில்லி ரோலில் நடித்திருந்தார். இந்த நிலையில் நடிகை ராதாவுடன் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்ததாகவும், இதுகுறித்து அவரிடம் பேசியபோது அவர் தன்னை தாக்கியதாக முரளி என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த நிலையில் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த பின்னணி என்னவென்று தெரியவில்லை, உண்மையில் நடிகை அந்த நபரை தாக்கினாரா என்ன என்பது பற்றி இன்னும் செய்தி வெளியாகவில்லை. போலீசார் விசாரிக்கும் பட்சத்தில் தான் உண்மை என்ன என்பது வெளிவரும்.

Related Posts