10 தொகுதிகளுக்கு தேர்தல்: TGTE கனடா குளறுபடிக்கு தீர்வு!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நாடு கடந்த தமிழிழ அரசாங்கத்தின் கனேடிய தேர்தல் ஆணையத்தின் மீது எழுந்த விமர்சனங்களை தொடர்ந்து முறைப்படி தேர்தல் நடத்த முன் வந்துள்ளது. 

இது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் வெளியிட்ட அறிக்கை 

கனடாவில் சில தொகுதிகளில் தேர்தல் மே 12ம் திகதி நடைபெறும் -தலைமைத்தேர்தல் ஆணையாளர்

அன்பார்ந்த கனடா வாழ் தமிழீழ மக்களே! நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமைத் தேர்தல் ஆணையாளரான ரஞ்சன் மனோரஞ்சன் ஆகிய நானும்,கனடாத் தேர்தல் ஆணையாளர் சிவபாலன் பாலசுந்தரம் மற்றும் நாடுகடந் தமிழீழ அரசாங்க முறையீட்டு ஆணைக்குழுவின் தலைவர் அனான் பொன்னம்பலம் ஆகிய மூவரும் இன்று (06/05/2024) அவசர சந்திப்பினுடாக பின்வரும் தீர்மானத்தை இணைந்து எடுத்துள்ளோம். 

தேர்தல் முறையீட்டு ஆணைக் குழுவின் முடிவே நாடுகடந்த தமிழீழ அரசாங்கதின் தேர்தல் ஆணையகத்தின் இறுதி முடிவாகும். அதாவது. கனடா தேர்தல் ஆணையகத்தினால் நிராகரிக்கப்பட்ட பத்து வேட்பளார்களின் விண்ணப்பங்களை மீளப்பெற்று, அவர்கள் பிரதிநித்துவப் படுத்தும் தொகுதிகளில் தேர்தல்கள் மே 12, 2024இல் நடாத்துவதென தீர்மானிக்கப்பட்டது. 

இந்த தேர்தலில் உங்களது வாக்குகளை தவறாது செலுத்தி ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். நாடுகடந்த தமிழ் அரசாங்கத்தில் தேர்தல் முறையீட்டு சதிள ஆணைக்குழவின் அறிக்கை! 

நன்றி. ரஞ்சன் மனோரஞ்சன் 

தலைமைத்தேர்தல் ஆணையாளர் 

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

Related Posts